கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையின் செல்லூர் கிராமத்தை சேர்ந்தவர்கள் மோகன் மற்றும் ஏழுமலை. நேற்று மாலை இரண்டு குடும்பத்தினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு இரு தரப்பினருக்கும் படுகாயம் ஏற்பட்டது.

இந்த நிலையில் மோகன் குடும்பத்தினருக்கும் ஏழுமலை குடும்பத்தினருக்கும் கடந்த 6 மாதத்திற்கு முன்பிருந்தே நிலத்தில் மாடுகள் மேய்ந்து தொடர்பாக தகராறு ஏற்பட்டது. இதனால் இரண்டு குடும்பத்தினக்கும் இடையே முன்விரோதம் இருந்தது.

நேற்று மாலை ஏழுமலை குடும்பத்தை சேர்ந்த சேகர் என்பவர் மோகனை தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார். இதனால் கோபமடைந்த மோகன் சேகரை தாக்கினார். இதனை பார்த்த ஏழுமலை குடும்பத்தினரும், மோகன் குடும்பத்தினரும் கம்பு, கட்டை போன்றவற்றை எடுத்து வந்து மாறி மாறி தாக்கி கொண்டனர்.

இரண்டு குடும்பத்தினரும் ஒருவரை ஒருவர் பலமாக தாக்கிக் கொண்டதால் இருதரப்பை சேர்ந்த 6 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அப்போது ஒரே நேரத்தில் இருதரப்பினருக்கும் சிகிச்சை அளிப்பது தொடர்பாக மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டது.

அதனால் மருத்துவமனை என்று கூட பாராமல் இரண்டு குடும்பத்தினர் மீண்டும் சண்டை போட்டுக் கொண்டனர். இது குறித்து அறிந்த போலீசார் மருத்துவமனைக்கு விரைந்து சென்று இருதரப்பினரிடயும் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் மருத்துவமனையில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.