மதுரை மாவட்டத்தை சேர்ந்த ஆதீனம் கடந்த மே 2-ம் தேதி காரில் சென்னை நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது சேலத்தில் இருந்து வந்த மற்றொரு காரும் சென்னையை நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த நிலையில் இரண்டு கார்களும் எதிரெதிரே செல்லும் போது உரசி லேசாக சேதமடைந்தது.

இந்த சம்பவம் குறித்து ஆதீனம் கூறுகையில் வேறு மதத்தை சேர்ந்த சிலர் தன்னை கார் ஏற்றிக்கொள்ள முயற்சிதாக குற்றம் சாட்டியிருந்தார். ஆனால் அதற்கு போலீசார் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக உயர் நீதிமன்ற வழக்கறிஞர் ராஜேந்திரன் என்பவர் ஆதீனம் மீது புகார் அளித்திருந்தார்.

அந்த புகாரில் இரு சமூகத்தினரிடையே பகைமை ஏற்படுத்துதல் உட்பட 4 பிரிவுகளின் கீழ் ஆதீனம் மீது புகார் அளித்திருந்தார். இந்த வழக்கினை விசாரித்த சைபர் கிரைம் போலீசார் ஆதீனம் நேரில் ஆஜராகுமாறு சம்மன் அனுப்பினர். கடந்த 30ஆம் தேதி சம்மன் அளித்த நிலையில் அவர் ஆஜராகவில்லை.

அதனால் இன்று அதாவது ஜூலை 5-ல் இரண்டாவது முறையாக ஆதீனம் ஆஜராகுமாறு போலீசார் சம்மன் அனுப்பி இருந்தனர். ஆனால் இந்த முறையும் ஆதீனம் ஆஜராகாமல் அவருடைய வழக்கறிஞர் மற்றும் தனி செயலாளர்‌ செல்வகுமார் ஆகியோர்  ஆஜர் ஆகினர். மேலும் ஆதீனம் வயதானவர் அவரால் எழுந்து நடக்க முடியவில்லை.

எனவே காணொளி காட்சி மூலம் ஆதீனம் ஆஜராக அவரது  வழக்கறிஞர் போலீசாரிடம் அனுமதி கேட்டுள்ளார். அதற்கு அவர்கள் மறுப்பு தெரிவித்தனர். வயது முதிர்வு காரணமாக ஆதீனத்தால் ஆஜராக முடியவில்லை. அதனால் சிறிது கால அவகாசம் கொடுக்குமாறு ஆதினத்தின் வழக்கறிஞர் கோரிக்கை விடுத்துள்ளார்.