
தமிழகத்தில் சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்திற்கு அடுத்தபடியாக காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் பிரம்மாண்ட விமான நிலையத்தை அமைக்க அரசு திட்டமிட்டுள்ளது. ஆனால் அந்த பகுதியில் விமான நிலையம் அமைத்தால் தங்களுடைய வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்று அந்த பகுதியை சேர்ந்த மக்கள் பல வருடங்களாக போராடி வருகிறார்கள். இருப்பினும் அரசு அந்த இடத்தில் விமான நிலையம் அமைப்பதில் உறுதியாக இருப்பதோடு சமீபத்தில் பறிமுதல் செய்யப்படும் நிலங்களுக்கு எவ்வளவு தொகை வழங்கப்படும் என்பது குறித்து அரசாணையை வெளியிட்டது. இந்நிலையில் தமிழக வெற்றி கழகத்தின் செயற்குழு கூட்டம் இன்று சென்னை பனையூர் அலுவலகத்தில் நடைபெற்றது.
அப்போது பேசிய நடிகர் விஜய் மக்களின் முதல்வர் என்று நீங்கள் கூறுகிறீர்களே இந்த 15,000 மக்களையும் உங்கள் கண்களுக்கு தெரியவில்லையா.? நீங்களே நேரடியாக பரந்தூர் சென்று இங்கு விமான நிலையம் வராது என்ற உத்தரவை பொதுமக்களுக்கு கொடுக்க வேண்டும். இல்லையெனில் நானே அந்த 15,000 மக்களுடன் தலைமை செயலகத்திற்கு நேரில் வந்து விமான நிலையம் அமைக்க கூடாது என உங்களிடம் முறையிடுவேன். எனக்கு அந்த நிலைமையை நீங்கள் வர வைக்க மாட்டீர்கள் என்று நம்புகிறேன் என கூறினார். மேலும் நடிகர் விஜய் ஆவேசத்துடன் பேசிய இந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
மக்களின் முதல்வர் என்று சொல்ல உங்களால் எப்படி முடிகிறது.
15000 மக்களும் நமது மக்கள் தானே தலைவரின் கர்ஜனை. pic.twitter.com/hqGLKBGM1z
— TVK IT Wing Official (@TVKHQITWingOffl) July 4, 2025