சென்னை பெரம்பூர் அடுத்துள்ள பகுதியில் அகிலன் நாகவல்லி என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு அர்ச்சனா(20) என்ற மகள் இருக்கிறார். இவருக்கும், விஜயகுமார் என்பவருக்கும் நேற்று முன்தினம் இரு வீட்டார் முன்னிலையில் திருமணம் நடந்தது. திருமணம் முடிந்த பிறகு மணமக்கள் இருவரும் பெண் வீட்டாரருக்கு அழைத்து வரப்பட்டனர். நேற்று முன்தினம் மாலை வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற இருந்த நிலையில் அர்ச்சனா மதியம் பியூட்டி பார்லர் சென்று வருவதாக கூறியுள்ளார்.

அதன் பின் வெளியே சென்ற அவர் மாலை வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் அக்கம் பக்கத்தில் தேடினர். ஆனால் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. இதையடுத்து புதுப்பெண் குறித்து அக்கம் பக்கத்தினரிடம் விசாரிக்க தொடங்கினர். அப்போது அர்ச்சனா ஏற்கனவே வேறு ஒருவரை காதலித்து வந்தது தெரிய வந்தது. இதையடுத்து அர்ச்சனாவை மீட்டு தருமாறு தாய் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் ஓடிய காதல் ஜோடியை குறித்து விசாரணை நடத்தி தேடி வருகின்றனர்.