
விருதுநகர் மாவட்டத்தில் பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் 4 லட்சம் நிவாரணமும் காயமடைந்தவர்களுக்கு 50000 நிவாரணமும் அறிவித்துள்ள நிலையில் இது போதாது 10 லட்ச ரூபாய் நிவாரணம் வேண்டும் என கூறி உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்களை விருதுநகர் எஸ்பி கண்ணன் மிரட்டியதாகவும் ஒழுங்கா இருக்கலனா வேறு மாதிரி ஆகிவிடும் என கூறியதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது. இது குறித்த வீடியோ ஒன்றும் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
இந்நிலையில் இந்த சம்பவத்திற்கு தற்போது எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்து ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது,
விருதுநகர் மாவட்டம் சின்னக்காமன்பட்டி பட்டாசு ஆலை வெடி விபத்தில் 8 பேர் உயிரிழந்த நிலையில், நிவாரணம் கோரி போராடிய மக்களைப் பார்த்து “ஒழுங்கா இருக்கணும், இல்லனா வேற மாதிரி ஆகிடும்” என்று விருதுநகர் எஸ்.பி. மிரட்டியுள்ளது வன்மையாக கண்டிக்கத்தக்கது. வேறு மாதிரி என்றால், எந்த மாதிரி? மடப்புரம் அஜித்குமார் மாதிரியா.? பட்டாசு ஆலைப் பாதுகாப்பை உறுதி செய்யும் நிர்வாகத் திறன் இல்லை; போராடும் மக்களின் கோரிக்கையைக் கேட்கக் கூட மனமில்லை; மக்களை மிரட்டவும், அச்சுறுத்தவும் மட்டும் @mkstalin அரசின் குரல்கள் உயர்கின்றனவா?
வரலாற்றுப் பாசிசம் தோற்றுவிடும் ஸ்டாலின் அரசின் கொடுங்கோன்மையிடம்! மக்களை மிரட்டுவது, வன்முறையை கட்டவிழ்த்து விடுவது , சட்டத்தை மீறி செயல்படுவதை எல்லாம் உடனடியாக கைவிட வேண்டும் என ஸ்டாலின் மாடல் அரசை எச்சரிக்கிறோம் என்று பதிவிட்டுள்ளார்.
சிவகாசி பட்டாசு ஆலை வெடிவிபத்தில் பலியானவர்களது குடும்பத்தினரை கோஷம் போட்டால் வேற மாதிரி ஆகிடும் என மிரட்டல் விடுகிறார் விருதுநகர் மாவட்ட எஸ்பி.
#FireworksAccident #TNPolice #virudhunagar pic.twitter.com/cj8YJLtcGl
— தமிழ் மார்க்ஸ் (@tamilmarxorg) July 2, 2025