
சென்னை சூரப்பட்டு பகுதியில் சுவாமிதாஸ் பாண்டியன் (62) – ஜாக்குலின் (59) தம்பதியினர் வசித்து வந்தனர். இவர்கள் இருவரும் தனியார் தொழில் நிறுவனம் ஒன்றை தொடங்க எண்ணிய நிலையில் தொழில் கடன் பெறுவதற்காக 2 வங்கிகளுக்கு சென்றுள்ளனர். அங்கு போலியான ஆவணங்களை கொடுத்து ரூ.20 லட்சத்து 75 ஆயிரத்தை கடனாக பெற்றுக் கொண்டு மோசடி செய்துள்ளனர்.
இதனையறிந்த வங்கி தம்பதிகள் மீது காவல் நிலையத்தில் புகார் கொடுத்தது. அந்த புகாரின் படி வழக்கு பதிவு செய்த மத்திய குற்றப்பிரிவு வங்கி மோசடி புலனாய்வு பிரிவு காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்தினார்கள். அதன் பின் அந்த தம்பதிகள் மீது எழும்பூர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றப் பத்திரிக்கை தாக்குதல் செய்யப்பட்டது. இவர்கள் மீதான வழக்கு விசாரணைக்கு வந்த போதும் தம்பதிகள் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்தனர்.
இந்த சம்பவம் நடந்து 2 வருடங்களுக்குப் பின் தற்போது காவல்துறையினர் சுவாமிதாஸ் பாண்டியன், மேரி ஜாக்குலின் ஆகியோரை நீதிமன்றத்தின் பிடிவாரண்டு உத்தரவின் படி கைது செய்துள்ளனர். மேலும் தம்பதிகள் வங்கிகளில் கடனை பெற்று மோசடி செய்துவிட்டு 2 ஆண்டுகள் தலைமறைவாக இருந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.