
பீகார் மாநிலத்தின் ஜமுய் நகரைச் சேர்ந்த விஷால் குமார் துபே, தனது மனைவியின் செயலால் வாழ்க்கையில் அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. இந்த சம்பவம் சமூக ஊடகங்களில் தற்போது பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரது மனைவி ஆயுஷி, மருமகனான சச்சினை காதலித்து திருமணம் செய்து கொண்ட சம்பவம் தற்போது நாடு முழுவதும் பேசப்படும் செய்தியாக மாறியுள்ளது.
2021ஆம் ஆண்டு ஆயுஷியை மணந்த விஷால், முன்னதாக ஃபிளிப்கார்ட்டில் பணியாற்றி வந்தார். நல்ல வருமானத்துடன் குடும்பம் அமைதியாக நடந்துவந்த நிலையில், தன்னுடைய மனைவி மருமகனுடன் வாழ்க்கை தொடங்கியதையடுத்து, அவமானத்தையும் மன அழுத்தத்தையும் சகிக்க முடியாமல் வேலைவிட்டுவிட்டு தனது பூர்வீக கிராமத்தில் டீ கடை நடத்த ஆரம்பித்துள்ளார்.
“நான் என் வாழ்க்கையை மீட்டெடுக்க இப்போது மிகவும் போராடுகிறேன். ஆயுஷியை ஒருபோதும் மன்னிக்க மாட்டேன்” என அவர் கூறியுள்ளார். விஷாலை மீண்டும் திருமணம் செய்து கொள்வீர்களா என்று கேள்வி எழுப்பியபோது, அவர், “திருமணத்தின் மேல் ஒரு வெறுப்பு வந்துவிட்டது… ஆயுஷி மீண்டும் வர நினைத்தால், நான் தற்கொலை செய்து கொள்வேன்” என்றார்.
இப்போது அவர் தனது மகள் மற்றும் வயதான பெற்றோர்களுடன் அமைதியான வாழ்க்கையை மேற்கொண்டு வருகிறார். “அவர்கள்தான் என் உலகம். எளிமையாக வாழ வேண்டிய கட்டாயத்தில் இப்போது நான் இருக்கிறேன்” என்று மன முழுதாக நொந்துள்ளது என கூறியுள்ளார். இந்த சம்பவம் திருமண உறவின் நம்பிக்கையை, மேலும் குடும்ப உறவுகளின் மறைந்துபோன மதிப்பை வெளிக்கொணர்கிறது.