தமிழக பாஜக கட்சியில் புதிதாக 4 பொதுச்செயலாளர்கள் சேர்க்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. டெல்லியில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி நட்டாவை, தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் சந்தித்தார். அப்போது அவரிடம் புதிய பொறுப்பாளர்கள்  பட்டியலை நயினார் நாகேந்திரன் ஒப்படைத்தார். இதில் கே வி ராமலிங்கம், கருப்பு முருகானந்தம், வினோத் செல்வம், கார்த்தியாயினிக்கு வாய்ப்பு வழங்கப்பட உள்ளது. நயினார் நாகேந்திரன் வழங்கிய பட்டியலுக்கு நட்டா ஒப்புதல் வழங்கியுள்ளார்.

ஆனால் உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் ஒப்புதலுக்காக காத்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. ஏற்கனவே அனுப்பப்பட்ட பட்டியலில் சில மாற்றங்கள் செய்து, வரும் வெள்ளிக்கிழமை அன்று பாஜக நிர்வாகிகள் பட்டியல் வெளியாக உள்ளது. இதில் குஷ்பு மற்றும் மீனா மாநில பொறுப்பு பெறலாம் என்று கூறப்படுகிறது. சரத்குமார் தேசிய பொறுப்பு கேட்பதாகவும், தற்போதுள்ள பட்டியலில் அவரது பெயர் இல்லை எனவும் தகவல் வெளியாகியுள்ளது