தர்மபுரி மாவட்டம் சொன்னம்பட்டி கிராமப்பகுதியில் விடுதலை சிறுத்தை கட்சியில் மாற்றுக் கட்சியை சேர்ந்தவர்கள் இணையும் விழா நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கலந்து கொண்டார். அவர் விசிக கட்சியில் இணையும் நபர்களுக்கு கட்சியின் துண்டை அணிவித்து கட்சியில் இணைத்துக் கொண்டார்.

பின்னர் திருமாவளவன் கூட்டத்தில் கலந்து கொண்டவர்களிடம் பேசினார். அவர் பேசியதாவது, இந்தியாவில் அம்பேத்கரை வைத்துதான் அரசியல் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் ஒரு சிலர் அம்பேத்கருக்கு எதிராகவும், ஒரு சிலர் அம்பேத்கரை ஆதரித்தும் செயல்பட்டு வருகிறார்கள். இந்நிலையில் ராகுல் காந்தி எந்த கூட்டத்திற்கு சென்றாலும் இந்திய அரசியலமைப்பு சட்டப் புத்தகத்தினை பற்றி பேசுகிறார்.

அவர்கள் அம்பேத்கருக்கு பிறந்த நாளும் கொண்டாடுகிறார்கள். ஆனால் இந்த மக்கள் இருக்கும் தெருவுக்கு தேர் வராது…. இவர்கள் கோவிலுக்கு உள்ளே நுழைய அனுமதி இல்லை….’ என்று சொல்லப்படுகிறது. ராகுல் காந்தி இந்திய அரசியலமைப்பு சட்டத்தை கையில் எடுப்பது என்பது அம்பேத்கரை பின்பற்றுவது போன்றதாகும்.

இதை பார்க்கும்போது நாம் தமிழ் நாட்டிற்காக பெரிய உழைப்பை கொடுத்துள்ளோம். தமிழகத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியில்லாமால் அரசியல் நடைபெறாது. மதம் என்பது மனிதனுக்கானது. அரசியல் கிடையாது என்பதை வெளிக்காட்டும் வகையில் திருச்சியில் மதச்சார்பின்மை பேரணியை நடத்தினோம். ஆனால் “பாஜக இந்து மதம்தான் பெரியது என்று நினைக்கிறது. இஸ்லாமியர்களையும், கிறிஸ்தவர்களையும் இந்த நாட்டை விட்டே துரத்த வேண்டும் என்று எண்ணுகிறது” என்று பேசினார்.