
சமூக ஊடகங்களில் ஒரு வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. சாலையில் நடந்த இந்த சம்பவத்தில், ஒரு ஸ்கூட்டர் ஓட்டுநர், போக்குவரத்து போலீசாரால் தடுக்கப்படுகிறார். ஆனால் அவர் ஒளிந்தும், ஓடியும், வாகனங்களின் இடைவெளிகளையும் பயன்படுத்தி தப்பித்து செல்கிறார். அந்தச் சாலையில் சுமார் 6 பாதைகள் இருக்கின்றன.
Sigma Driver 💀 pic.twitter.com/f74o2fYzu6
— Dudu Don (@confusing_wot) June 16, 2025
ஒவ்வொன்றிலும் போக்குவரத்து நெரிசலாகவே இருக்கிறது. ஆனாலும், அந்த ஸ்கூட்டர் ஓட்டுநர், வித்தியாசமான முறையில் தப்பிக்கிறார். ஒரு நேரத்தில் வாகனங்களுக்கு நடுவில் நுழைந்து, பின்னர் வேறு பாதைக்கு செல்கிறார்.
இந்த வீடியோ தற்போது X தளத்தில் @confusing_wot என்ற கணக்கில் பதிவேற்றப்பட்டுள்ளது. வீடியோவுக்கு ‘Sigma Driver’ என்ற தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த வீடியோவை இதுவரை மில்லியன் கணக்கானோர் பார்த்து வருகிறார்கள்.
பார்வையாளர்கள் அந்த ஓட்டுநரின் திறமையை பாராட்டி வருகிறார்கள். ஒருவர், “5 நட்சத்திர ஓட்டுநர்!” என குறிப்பிட்டிருந்தால், மற்றொருவர் “இவர் போலீஸ் தேர்வுக்கு நேரடியாக தேர்வு செய்யப்பட வேண்டியவர்” என சுட்டிக்காட்டியுள்ளார்.