
உள்துறை மந்திரி அமித்ஷா என்று தமிழகம் வந்த நிலையில் மதுரையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது, தமிழ்நாட்டில் ஆட்சி செய்யும் திமுக அரசு நூறுக்கு நூறு தோல்வி அடைந்த அரசு. தேர்தல் வாக்குறுதிகளில் 10 சதவீதத்தை கூட அவர்கள் நிறைவேற்றவில்லை. அவர்கள் தென் தமிழகத்திற்கு எதையுமே செய்யாமல் துரோகம் செய்துவிட்டனர்.
தமிழ் தமிழ் என சொல்லும் திமுக அரசு உயர் கல்வியை தமிழ் மொழியில் கொண்டு செல்லாதது ஏன். தமிழகத்தின் பெருமை கூறும் செங்கோலை நாடாளுமன்றத்தில் வைத்த போது அவர்கள் பாராட்டாதது ஏன்.? திருப்பரங்குன்றம் மலையை சிக்கந்தர் மலை என கூறி பிரிவினை வாதத்தை ஏற்படுத்துகின்றனர். திமுக ஆட்சியை எப்படி அகற்ற வேண்டும் என்று சிந்தனையிலேயே இருக்க வேண்டும்.
ஜூன் 22 ஆம் தேதி நடைபெறும் முருக பக்தர்கள் மாநாட்டை சிறப்பாக நடத்த வேண்டும். தமிழ்நாட்டிற்கு வந்து உங்களிடம் தமிழ் மொழியில் பேச முடியவில்லை என்பது வருத்தமாக இருக்கிறது. அடுத்து வரும் தேர்தலில் கண்டிப்பாக பாஜக மற்றும் அதிமுக கூட்டணி ஆட்சி அமையும்.
ஆப்ரேஷன் சிந்துருக்காக தமிழகத்திலிருந்து வந்த ஆதரவு குரல்களை எப்போதுமே மறக்க முடியாது. அவர்கள் காஷ்மீரில் தாக்குதல் நடத்தியதால் பாகிஸ்தானுக்குள் 100 கிலோமீட்டர் தொலைந்து பயங்கரவாதிகளை தாக்கி அழித்தது நம் ராணுவம்.
மேலும் வருகிற 2026 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தல் பாஜகவுக்கு மிக முக்கியமானது என்பதால் டெல்லியில் ஆம் ஆத்மியை வீழ்த்தியது போல் கண்டிப்பாக தமிழகத்தில் திமுக ஆட்சியை வீழ்த்துவோம் என்று கூறினார்.