விஜயின் தமிழக வெற்றிக்கழகம் வருகிற 2026 சட்டமன்ற தேர்தலில் களம் காண உள்ளது. வருகிற தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகள் இப்போது இருந்தே முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் மக்கள் பிரச்சினைகளை சுட்டிக்காட்டி மக்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகிறார்.

தற்போது வந்த தகவலின் படி முன்னாள் ஐஆர்எஸ் அதிகாரி அருண்ராஜ் தமிழக வெற்றி கழகத்தின் கொள்கை பரப்பு பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளதாக தலைவர் விஜய் அறிவித்துள்ளார்.