
தமிழ் சினிமாவில் நடிகை சிம்ரனுக்கு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. தற்போது வில்லி மற்றும் குணசித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். இவர் முன்னணி நடிகர்களுடன் இணைந்து ஏராளமான சூப்பர் ஹிட் படங்களில் நடித்துள்ளார்.
சமீபத்தில் அஜித்குமாரின் குட் பேட் அக்லி திரைப்படத்தில் கேமியோ ரோலில் நடித்தார். சசிகுமார் உடன் சிம்ரன் இணைந்து நடித்த டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படம் சூப்பர் ஹிட் ஆனது. தற்போது நடிகை சிம்ரனின் இன்ஸ்டாகிராம் பதிவு சோசியல் மீடியாவில் வேகமாக பரவி வருகிறது.
View this post on Instagram
அதில் கல்லூரி படிப்பை முடித்து பட்டம் பெற்ற மகனின் புகைப்படத்தை பதிவிட்டு கேப்ஷனில் “சில வருடங்களுக்கு முன் என் கை குழந்தையாக இருந்த எங்கள் மகன் இன்று பட்டத்தை வாங்கியதை பார்க்கும்போது பெருமையாக இருக்கிறது.
எங்களுக்கு மேல் வளர்ந்துள்ள எங்கள் மகன் இன்னும் வளர்ச்சி அடைவான். நீ எங்களை பெருமைப்படுத்தி விட்டாய் என பதிவிட்டுள்ளார். அவருக்கு நெட்டிசன்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.