கிரேட்டர் நொய்டா அருகே உள்ள கவுர் சிட்டி-1 பகுதியில் வசிக்கும் இளம்பெண் ஒருவர், பார்லர் விளம்பரத்திற்கான ஒப்பந்தத்தில் வேலை செய்யும் எண்ணத்தில் அனிமேஷ் பஸ்தியா என்ற ஒடிசாவைச் சேர்ந்த இளைஞருடன் தொடர்பில் இருந்துள்ளார்.
ஆனால், அவர் அந்தப் பெண்ணின் நம்பிக்கையை மோசடியாக பயன்படுத்தி, அவரது ஆபாச புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உருவாக்கி, அவற்றை சமூக ஊடகங்களில் வெளியிடுவதாக மிரட்டி, மொத்தம் ரூ.15.47 லட்சம் பணத்தை அனிமேஷ் பறித்துள்ளார்.
பாதிக்கப்பட்ட பெண் அனிமேஷ்க்கு 2 தவணைகளாக ரூ.8.13 லட்சமும், ரூ.7.34 லட்சமும் பணமாக அனுப்பியுள்ளதாகவும், தொடர்ந்து பணம் கேட்டதாலேயே அதிர்ச்சி அடைந்து பிஸ்ராக் காவல் நிலையத்தில் புகார் அளித்ததாகவும் கூறப்படுகிறது. இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணையை ஆரம்பித்துள்ளனர்.
குற்றம் சாட்டப்பட்ட அனிமேஷ் பஸ்தியா, வேலை வாய்ப்பு என்ற பெயரில் நெருங்கி வந்ததாகவும், பின்னர் பணம் பறிக்கவும், தனிப்பட்ட புகைப்படங்களை தவறாக பயன்படுத்தியும் பெண்ணை மிரட்டியதாகவும் தெரிகிறது.
இவ்வாறு ஆன்லைன் வாய்ப்புகள் எனும் பெயரில் ஏமாற்றம் ஏற்படும் சந்தர்ப்பங்களில் பெண்கள் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
