
பள்ளிக்கல்வித்துறையில் 3 இயக்குநர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். தனியார் பள்ளிகள் இயக்குநர் பழனிசாமி, ஆசிரியர் தேர்வு வாரிய உறுப்பினராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
பாடநூல் கழக செயலாளர் குப்புசாமி, தனியார் பள்ளிகள் இயக்குநராக பணியிட மாற்றம் செய்யப்பட்டார். ஆசிரியர் தேர்வு வாரிய உறுப்பினர் உஷா ராணி, பாடநூல் கழக செயலாளராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.