2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அனைத்து கட்சிகளும் மும்முரமாக களப்பணியில் ஈடுபட ஆரம்பித்துவிட்டனர். 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக பாஜக கூட்டணி சேர்வதாக ஏற்கனவே அறிவித்தது. தமிழக வெற்றி கழகம் யாருடன் கூட்டணி வைக்கப் போகிறது என தெரியவில்லை. தேர்தல் நெருங்கும் சமயத்தில் எந்தெந்த கட்சிகள் கூட்டணி சேரும் என்பது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் 2026 சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஓராண்டே உள்ள நிலையில் திமுக தலைமையிலான கூட்டணி முன்னிலையில் உள்ளதாக பிரபல ஆங்கில ஊடகமான இந்தியா டுடே கணித்துள்ளது. திமுக அணிக்கு வலுவான போட்டியை அதிமுக பாஜக கூட்டணியால் கொடுக்க முடியுமா என்பது சந்தேகமே எனவும் கருத்து வெளியாகியுள்ளது.