தஞ்சை மாவட்டம் பேராவூரணி வாரச் சந்தையில் காய்கறி மற்றும் தேவையான பொருட்களை வாங்க நேற்று திண்டுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி தாலுகா பாலகிருஷ்ணாபுரம் கிராமத்தைச் சேர்ந்த ஜெயராமன் (25), அதே கிராமத்தைச் சேர்ந்த, தற்போது வெளிநாட்டில் வேலை செய்து வரும் ராஜசேகரனின் மகன் அறிவுக்கரசு (12) ஆகிய இருவரும் சாலை விபத்தில் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஜெயராமன், சிறுவன் அறிவுக்கரசுடன் மோட்டார் சைக்கிளில் பேராவூரணி சந்தைக்கு புறப்பட்டு, பொருள் வாங்கிய பின்பு, பணம் போதவில்லை என்பதால் பட்டுக்கோட்டை சாலையில் அரசு மருத்துவமனை எதிரே உள்ள ஏ.டி.எம். மையம் நோக்கிச் சென்றனர்.

வழியில் சாலையை யூ-டர்ன் எடுத்து திரும்ப முயன்ற போது, பட்டுக்கோட்டை நோக்கி வேகமாக வந்த ஒரு லாரி மோதி பயங்கர விபத்துக்குள்ளாகினர். இதில் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குபதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.