
சென்னையில் உள்ள புது வண்ணார்பேட்டையில் ஜான் பாஷா என்ற 35 வயது நபர் நடைபாதையில் தங்கி கூலி வேலை பார்த்து வந்தார். இவரது சொந்த ஊர் வேலூர் மாவட்டம். இவர் நேற்று முன்தினம் நடைபாதையில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இது தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து ஜான் பாஷாவின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அப்போது அவரது உடலில் பலத்த காயங்கள் இருப்பது தெரிய வந்ததோடு அடித்து கொலை செய்யப்பட்டதும் தெரியவந்தது.
பின்னர் அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை போலீசார் ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டதில் பல அதிர்ச்சியூட்டும் தகவல்கள் தெரியவந்தது. அதாவது அந்த பகுதிக்கு சில திருநங்கைகள் வந்து செல்வது வழக்கம். அந்த வகையில் சம்பவ நாளில் குகன் என்ற மலயா (40) அங்கு சென்றுள்ளார். இவர் ஒரு திருநங்கை. இவர் ஜான் பாஷாவை தன்னுடைய ஆசைக்கு இணங்குமாறு கூறியுள்ளார். ஆனால் அவர் அதற்கு மறுப்பு தெரிவித்ததால் கோபத்தில் அவரை அடித்து கொலை செய்துள்ளார். இதைத்தொடர் திருநங்கையை போலீசார் கைது செய்த அவரிடம் விசாரணை நடத்தினர்.
அந்த விசாரணையில் ஜானின் சட்டை பையில் பணம் இருப்பதை இவர் பார்த்துள்ளார். இந்த பணத்தின் மீது ஆசை வந்ததால் அவரை தன் ஆசைக்கு இணங்குமாறு கூறியுள்ளார். ஆனால் அவர் அதற்கு மறுப்பு தெரிவித்து திட்டியதால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் கோபமடைந்த மலயா அவரை கீழே தள்ளி அடித்தே கொலை செய்துள்ளார். மேலும் அந்த திருநங்கை மீது போலீசார் வழக்கு பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வரும் நிலையில் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.