தமிழக முதல்வர் ஸ்டாலின் நிதி ஆயோக் கூட்டத்தில் 3 வருடங்களாக கலந்து கொள்ளாத நிலையில் இந்த வருடம் மட்டும் கலந்து கொண்டதால் அவர் மீது எதிர்க்கட்சிகள் விமர்சனங்களை முன்வைத்து வருகிறது. குறிப்பாக எடப்பாடி பழனிச்சாமி அமலாக்க துறை ரெய்டுக்கு பயந்து தான் எடப்பாடி பழனிச்சாமி முதல்வர் ஸ்டாலின் டெல்லிக்கு சென்றதாக கூறியிருந்தார். இந்நிலையில் தற்போது தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜயும் முதல்வர் ஸ்டாலின் டெல்லியில் நடைபெற்ற நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்து கொண்டதை விமர்சித்துள்ளார்.

இது பற்றி அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது, தமிழக வெற்றி கழகத்தின் முதல் கூட்டத்தின் போதே திமுகவை அரசியல் எதிரியாகவும் பாஜகவை கொள்கை எதிரியாகவும் அறிவித்த நிலையில், பாஜக மற்றும் அதிமுக மீண்டும் கூட்டணி அமைத்த போது திமுகவும் மறைமுகமாக பாஜகவுடன் கூட்டணி வைத்திருந்ததாக கூறினோம். அதன் பிறகு ஊழல் செய்தவர்கள் மீது நடவடிக்கை பாயும் போது உடனடியாக அவர்கள் டெல்லிக்கு செல்வார்கள். ஏற்கனவே அமைச்சர்கள் பலர் சென்ற நிலையில் தற்போது முதலமைச்சர் டெல்லிக்கு சென்றுள்ளார்.

டாஸ்மாக் ஊழல் விவகாரத்தில் அமலாக்கத்துறை ரெய்டு நடத்திய நிலையில் சமீபத்தில் டாஸ்மாக் மேலாண் இயக்குனர் மற்றும் திமுக தலைமையின் குடும்ப உறுப்பினர்களுக்கு சொந்தமான இடங்களில் ரெய்டு நடைபெற்றது. அமலாக்கத்துறை விசாரணைக்கு தடை கேட்டு உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு இடைக்கால தடை வாங்கிய நிலையில் நிரந்தர தடை இல்லை என்பதால் எங்கே பேசினால் நிரந்தர தடை கிடைக்குமோ அங்கு சென்றுள்ளார். கடந்த வருடம் நடைபெற்ற நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்து கொள்ளாத முதல்வர் ஸ்டாலின் அதற்கான காரணத்தை அடுக்கடுக்காக சொல்லி வீடியோ வெளியிட்டார்.

இந்த முறை மட்டும் ஏன் செல்ல வேண்டும். எல்லாம் அமலாக்கத்துறை படுத்தும் பாடு. என்றைக்கு இருந்தாலும் அமலாக்கத்துறை நடவடிக்கை என்பது காலை சுற்றும் பாம்பு என்பதால் திரு மு.க ஸ்டாலின் ஆயிரம் கோடி தோண்டி எடுக்கப்பட்டால் நம் குடும்ப உறுப்பினர்களுக்கு ஆபத்து வந்துவிடுமோ என்ற அச்சத்தில் நிதி ஆயோக் கூட்டத்தை காரணமாக வைத்து டெல்லிக்கு சென்று பிரதமரை தனியாக வேறு சந்தித்துள்ளார். இந்த சந்திப்பின்போது அமலாக்க துறை மற்றும் தன்னுடைய குடும்ப உறுப்பினர்கள் நலன் குறித்து எதுவும் பேசவில்லை என முதல்வர் ஸ்டாலினால் மனசாட்சியை தொட்டு சொல்ல முடியுமா.

உண்மையில் திமுகவை பாஜகவினர் அரசியல் ரீதியாகவும் கொள்கை ரீதியாகவும் எதிர்க்கிறார்கள் என்றால் பாஜகவால் எப்படி இவர்களை கொஞ்சி குலாவ முடியும். இதுதான் இவர்கள் இருவருக்குள்ளும் உள்ள மறைமுக கூட்டணியின் வெளிப்பாடு. இந்த சூழலில் நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்து கொண்டவர்களின் புகைப்படம் வெளிவந்துள்ளது. அதை உற்று நோக்கினால் பூனைக்குட்டி வெளியே வந்தது புலப்படும். அதாவது அந்த புகைப்படத்தில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு வெளிப்படையாக கூட்டணி வைத்துள்ளதால் முன்வரிசையில் இருக்கும் நிலையில் அதே முன் வரிசையில் இருக்கும் தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலினும் மறைமுக கூட்டணியில் இருக்கிறார் என்பதால்தான்.

இது பாஜகவுக்கு திமுகவுக்கும் இடையிலான மறைமுக கூட்டணி மற்றும் பேரத்தை காட்டுகிறது. மேலும் ஒன்றிய அரசின் வஞ்சனைப் போக்கை கண்டித்து பாஜக ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் உள்ள முதல்வர்கள் நிதி ஆயோக் கூட்டத்தை கலந்து கொண்டுள்ளனர் என்று கூறினார்.