
சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் கடந்த வருடம் டிசம்பர் மாதம் மாணவி ஒருவர் பல்கலைக்கழக வளாகத்தில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இந்த வழக்கில் ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டார்.
இவர் மீது ஏற்கனவே பல குற்ற வழக்குகள் இருப்பது தெரியவந்த நிலையில் திருட்டு வழக்குகளும் பதிவாகியுள்ளது. இவர் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்றம் இந்த பாலியல் வழக்கில் மே 28ஆம் தேதி தீர்ப்பு அறிவிக்கப்படும் என்று அறிவித்துள்ளது. மேலும் மாணவி புகார் கொடுத்த 5 மாதங்களில் தீர்ப்பு வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.