சமூக ஊடகங்களில் தற்போது வேகமாக பரவி வரும் ஒரு வீடியோ, பார்வையாளர்களுக்கு  அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோவில், ஒரு மனிதர் கையில் சிறிய குச்சியுடன் நின்றபோதும், 9 சிங்கங்கள் அவரை நோக்கி வராமல் பதற்றமடைந்து பின்னே செல்வது போன்ற காட்சி பதிவாகியுள்ளது. இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள், “சிங்கங்களே பயந்து ஓடும் அளவுக்கு அந்த நபரின் தைரியம் என்ன?” என வியப்புடன் தங்கள் கருத்துகளை பகிர்ந்துள்ளனர்.

https://www.instagram.com/reel/DIqIB9RKFWy/?igsh=OXl0M3NydWllbnk1

இந்த அதிர்ச்சி தரும் காட்சி, @basedofpashtuns என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றப்பட்டது. இதுவரை 25 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்த வீடியோவை லைக் செய்துள்ளனர். வீடியோவில், அந்த மனிதர் குச்சியை சிங்கங்களை பார்த்து காட்டியவுடன் அவை பின்வாங்குவதும், சிலர் அங்கிருந்து விரைவாக விலகுவதும் தெளிவாக காணப்படுகிறது. இந்தச் சம்பவம் எங்கு நிகழ்ந்தது என்பது தெளிவாக தெரியவில்லை, ஆனால் அந்த மனிதன் ஆப்கானிஸ்தானைச் சேர்ந்தவர் என நெட்டிசன்கள் கூறுகின்றனர்.

பயனர்கள் சிலர் இந்த நபரை “அற்புதமான ஆப்கானிஸ்தானி சகோதரர்” என புகழ்ந்துள்ளனர். மற்றொரு பயனர், “சிறுவயதிலிருந்தே சிங்கங்களுக்கு குச்சி பயத்தை உருவாக்கி இருக்கலாம்” என நம்புகிறார். ஒரு நகைச்சுவை விமர்சனத்தில், “இது பாகிஸ்தானிய சிங்கம் ஆகலாம், அதனால்தான் ஆப்கானின் முன்னால் பூனை போல நடந்து கொண்டது” எனக் கூறியுள்ளார். தற்போது, இந்த வீடியோவின் பின்னணி குறித்து பலரும் ஆர்வமாக உள்ள நிலையில், இது உண்மை சம்பவமா அல்லது பயிற்சியுடன் கூடிய நிகழ்வா என்பதற்கான விளக்கம் எதிர்பார்க்கப்படுகிறது.