
உத்திரபிரதேச மாநிலம் கஜூரி கரவுட்டா கிராமத்தில் சமீபத்தில் திருமண விழா ஒன்று நடைபெற்றது. இந்த திருமண விழாவின்போது மணமகன் அழைப்பின் போது உறவினர்கள் ஊர்வலமாக சென்று கொண்டிருந்தனர். அந்த ஊர்வலத்தில் ராம்பூர் ஜூரியாவை சேர்ந்த ராஜன் (30) என்பவர் கலந்து கொண்ட நிலையில் ஊர்வலத்துடன் சேர்ந்து நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது திடீரென மர்ம நபர் ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் ராஜன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த தகவலை அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் ராஜனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக தீவிர விசாரணை நடத்திவரும் நிலையில், இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.