
பீகார் மாநிலத்தின் சாப்ரா மாவட்டத்தில் உள்ள கவுரா கிராமத்தில் ஒரு தனித்துவமான குடும்ப நிகழ்வு தற்போதைய பரபரப்பான செய்தியாக மாறியுள்ளது. அதாவது அந்த பகுதியில் வசிக்கும் ரோஷன் அன்சாரி என்பவரின் மனைவி சாஹின் கட்டூன், “பியூட்டி பார்லருக்குச் செல்கிறேன்” என்று கூறி கடந்த மே 18, 2025 அன்று வீட்டை விட்டு சென்றார்.
ஆனால் பின்னர் திரும்பி வரவில்லை. 14 வருட திருமண வாழ்க்கையில், 5 குழந்தைகள் உள்ள நிலையில், இப்படி ஒரு முடிவெடுத்திருப்பது அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
கணவர் ரோஷன் அளித்த தகவலின்படி, கடந்த ஒரு வருடமாக சாஹின் கட்டூன் என்ற மர்ம இளைஞனுடன் தொடர்பில் இருந்துள்ளார். எப்போது அவரிடம் இது பற்றி கேட்டாலும், “வெறும் நண்பர்” எனச் சொல்லிவிட்டு விவரங்களை மறைத்தார். இப்போது, ரோஷன் தனது மனைவியும், அடையாளம் தெரியாத அந்த இளைஞனும் சேர்ந்து வீட்டை விட்டு ஓடிப் போயிருக்கலாம் என சந்தேகம் தெரிவித்து, கவுரா போலீசில் புகார் அளித்துள்ளார்.
அந்தப் புகாரின் படி வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் சாஹின் மற்றும் அவரது மர்ம காதலனைத் தேடி வருகிறார்கள். இது காவல் நிலைய தலைவர் பாஜிகர் குமார் இதற்கான அதிகாரப்பூர்வ நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளார். தற்போது அவரது கணவர் தனது 3 மகன்கள் மற்றும் 2 மகள்களுடன் தனியாக வாழ்ந்து வருகிறார் ரோஷன். “என் மனைவி அழகு நிலையத்திற்குச் சென்றுவிட்டாள்… ஆனால் இப்போது 5 குழந்தைகளை யார் வளர்ப்பது?” என்று அவர் மனவேதனையுடன் கூறியுள்ளார். இந்த சம்பவம் சமூக வலைதளங்களிலும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.