
சென்னையில் கப்பல் சிப்பந்திகள் நல மையத்தில் உலக தமிழ் கிறிஸ்தவ இயக்கம் சார்பில் வழக்காடுவோம் வாருங்கள் என்ற நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானிடம் கேள்விகள் கேட்கப்பட்டது. இதில் பங்கேற்ற கிறிஸ்தவர்கள் மற்றும் மத போதவர்கள் சீமான் இதற்கு முன்பு கிறிஸ்தவர்களை குறித்து பேசியதை பற்றி கேள்வி கேட்கப்பட்டது. அப்போது பெரியார் பற்றி நீங்கள் பேசிய பேச்சுக்கள் தற்போது சமூக வலைதளங்களில் தவறாக பயன்படுத்தப்படுகிறதே? அது பற்றி உங்கள் கருத்து என்ன என்று கேள்வி கேட்கப்பட்டது.
இதற்கு பதில் அளித்த அவர் கூறியதாவது சிறிய வயதிலிருந்து கடவுள் மறுப்பு சிந்தனை உடன் வளர்ந்தவன் நான் இதனால் கடவுள் மறுப்பு சாதி மறுப்பு பற்றி பெரியார் இயக்க மேடைகளிலும் மார்க்சிய மேடைகளிலும் பலமுறை பேசியிருக்கிறேன். 12 ஆண்டுகளாக அதுபோன்ற மேடைகளில் எனது பேச்சு ஒலித்து இருக்கிறது அப்போது நான் கிறிஸ்தவ வழிபாடு பற்றியும் இயேசுவைப் பற்றியும் பேசிய பேச்சுக்கள் அரசியலில் நான் எங்கு வளர்ந்து விடுவேனோ என கருதி பயத்தில் உள்ள திராவிட ஆதரவாளர்கள் தற்போது பரப்பி வருகின்றனர்.
கடவுள் மறுப்பு கொள்கையில் இருக்கும் போது தான் அப்படி பேசி இருக்கிறேன் அதில் நான் பேசியதை முழுமையாக கேட்காமல் சில பகுதிகளை மட்டும் வெட்டி பரப்பி வருகின்றனர். கிறிஸ்தவர்களை பற்றியும் பேசி உள்ளேன் ராமரை பற்றியும் பேசி உள்ளேன். நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஆன பிறகு அரசியலில் நான் எந்த கருத்துக்களை பேசுகிறேன் என்பதை நான் பார்க்க வேண்டும் அதை விட்டுவிட்டு திராவிட அரசியல் பேசுபவர்கள் அச்சத்தில் பரப்பி வரும் எனது பழைய வீடியோக்களை பற்றி நீங்கள் கவலை கொள்ளாதீர்கள் என்று தெரிவித்தார்.
20 ஆண்டுகளுக்கு முன்பு பெரியார் பற்றியும் மேடையில் பேசியது தவறுதான் பெரியாரே பெரும் தவறுதான் இன்று பலர் தமிழகத்தில் பெரியார் மண் என்று சொல்கிறார்கள். ஆனால் பெரியாரே ஒரு மண் தான். தமிழகத்தில் சொந்த பெரியார்கள் ஆயிரம் பேர் உருவாகி இருக்கிறார்கள் அப்படி இருக்கும் போது வந்த பெரியார் தமிழகத்தில் தேவை இல்லை. பரிசுத்த ஆவியால் இட்லி வேகுமா?என்று கேட்ட கருணாநிதியை மன்னித்து விட்டீர்கள் என்னை மன்னிக்க மாட்டீர்களா எனவே இப்போது நான் பேசுவதை வைத்து தான் முடிவு செய்ய வேண்டும் என்று கூறினார்.