
பொது தேர்வுகள் முடிந்து 1 முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு கோடை விடுமுறை விடப்பட்டது. தற்போது வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பள்ளி திறக்கப்படும் தேதியில் மாற்றம் இருக்குமா என எதிர்பார்ப்புகள் நிலவி வந்தது.
தற்போது தொடக்க கல்வி இயக்குனர் வெளியிட்ட அறிக்கையில் பள்ளி திறப்பில் எந்த மாற்றமும் இல்லை. ஜூன் 2-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும். அரசு -அரசு நிதி உதவி பெறும் ஆரம்பம் மற்றும் நடுநிலைப் பள்ளிகளை திறப்பதற்கு தயாராக வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.