
உத்தரப்பிரதேச மாநிலம் புலந்த்ஷர் மாவட்டத்தின் கவுரலி (கரௌலி) கிராமத்தில், தனது மகளை தொடர்ந்து துன்புறுத்திய இளைஞரை எதிர்த்து கேட்ட தந்தை ஒருவர் கொடூரமாக தாக்கப்பட்ட அதிர்ச்சி சம்பவம் வெளியாகியுள்ளது.
பாதிக்கப்பட்ட குடும்பத்தினரின் புகாரின்படி, அதே கிராமத்தை சேர்ந்த ஒரு இளைஞர், அந்தச் சிறுமி பள்ளி மற்றும் பிற அன்றாட நடவடிக்கைகளுக்குச் செல்லும் வழிகளில் பின் தொடர்ந்து துன்புறுத்தி வந்துள்ளார். இந்த விவகாரம் குறித்து சிறுமி தனது தந்தையிடம் தெரிவித்ததையடுத்து, அவர் கிராமப் பெரியவர்களிடமும், குற்றம் சாட்டப்பட்ட இளைஞரின் குடும்பத்தினரிடமும் புகார் தெரிவித்துள்ளார்.
योगीराज में बहन-बेटियों की रक्षा करना अब अपनी जान को जोखिम में डालने जैसा हो गया है।
बुलंदशहर में गुट बनाकर आए दबंगों ने बेटी से छेड़छाड़ का विरोध करने पर उसके पिता को ईंट और लाठी से बर्बरतापूर्वक पीटा जिसका वीडियो भी वायरल है।
न महिलाएं सुरक्षित हैं और न उनके रक्षक, और योगी जी… pic.twitter.com/PuHqtnxcJp
— UP Congress (@INCUttarPradesh) May 21, 2025
“>
இதனைக் தொடர்ந்து மே 19ஆம் தேதி, ஒரு கும்பல் தாக்குதலில் ஈடுபட்டு, அந்த தந்தையை சாலையில் கடுமையாக தாக்கியது. இந்த சம்பவம் அருகிலுள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. அதில், பாதிக்கப்பட்டவர் தகாத வார்த்தைகளுடன் பயங்கரமாக அடித்து உதைத்து தாக்கியுள்ளனர்.., காயமடைந்த அவர், காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
“என் மகளை தொடர்ந்து துன்புறுத்தியதை எதிர்த்ததற்காக என்னை கொடூரமாக தாக்கினர். இப்போது என் குடும்பத்தின் பாதுகாப்பை நினைத்து நான் அஞ்சுகிறேன்” என அவர் கூறியுள்ளார்.
இதுகுறித்து நகர காவல் கண்காணிப்பாளர் கூறுகையில், “பாதிக்கப்பட்ட தந்தையின் புகாரின் அடிப்படையில் நான்கு நபர்களுக்கு எதிராக வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. குற்றவாளிகள் விரைவில் கைது செய்யப்படுவார்கள்.
பாதிக்கப்பட்டவரின் குடும்பத்திற்கு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார். தற்போது போலீசார் வழக்குப் பதிவு செய்து, தாக்குதலில் ஈடுபட்டவர்களை பிடிக்க விசாரணையை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.