இந்தியாவில் முழு கல்வியறிவு பெற்ற முதல் மாநிலமாக மிசோரம் சாதனை படைத்துள்ளது. இதனை அம்மாநில முதலமைச்சர் லால்டுஹோமோ அறிவித்துள்ளார். மிசோரமில் உள்ள பல்கலைக்கழகத்தில் நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. அப்போது மத்திய கல்வித்துறை இணை அமைச்சர் ஜெயந்த் சவுத்ரி முன்னிலையில் மாநில முதல்வர் இதனை தெரிவித்தார்.

கடந்த 2011 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி மிசோரம் மாநிலத்தின் எழுத்தறிவு விகிதம் 91.33 சதவீதமாக இருந்தது. அப்போது மிசோரம் நாட்டிலேயே அதிக எழுத்தறிவு விகிதம் கொண்ட மூன்றாவது மாநிலமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.