
இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளங்களில் பல்வேறு விதமான வீடியோக்கள் வெளியாகி வைரல் ஆகிறது. அதிலும் சில வீடியோக்கள் மிகவும் ஆச்சரியமானதாகவும் நகைச்சுவையானதாகவும் யோசிக்க வைப்பதாகவும் இருக்கும். அப்படிப்பட்ட ஒரு வீடியோ தான் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. அதாவது சாலையில் ஒரு சிறுமி ஒரு நாயின் மீது சவாரி செய்கிறார். அப்போது ஏராளமான நாய்கள் அந்த சிறுமியின் பின்னால் செல்கிறது.
Z+Security with Dogesh Gang🫡
pic.twitter.com/Hssuh1Ht2z— rareindianclips (@rareindianclips) May 21, 2025
வாகனங்கள் வருவதை பார்த்து நாய்கள் அந்த சிறுமியை பத்திரமாக மற்றொரு முனைக்கு அழைத்து செல்கிறது. பின்னர் சாலையின் தடுப்பின் மீது ஏறி மறுமுறைக்கு வாகனங்களை கவனித்து சிறுமியை அழைத்து செல்கிறது. இந்த வீடியோவை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பயனர் இதுதான் விஐபி என்ட்ரி Z+செக்யூரிட்டி என்று பதிவிட்டுள்ளார். மேலும் இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வரும் நிலையில் பலரும் தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.