தமிழ்நாட்டில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் கீழ் கடந்த 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் பணம் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் 1.14 கோடி மகளிர் பயன்பெறும் நிலையில் திட்டம் மேலும் விரிவாக்கப்பட இருக்கிறது. தமிழகத்தில் மொத்தமாக 2 கோடியே 26 லட்சத்து 14,128 கோடி ரேஷன் அட்டைதாரர்கள் இருக்கும் நிலையில் இதில் 1.14 கோடி மகளிர் மட்டும் உரிமை தொகை பெறும் நிலையில் மீதமுள்ள பெண்களுக்கு கிடைக்கவில்லை.

இதன் காரணமாக அரசு தகுதியான மற்றும் விடுபட்ட பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் மாதம் ரூபாய் ஆயிரம் வழங்க முடிவு செய்துள்ளது. இதற்காக கலைஞர் பிறந்த நாளின் போது அடுத்த மாதம் தமிழகம் முழுவதும் சுமார் 9,000 சிறப்பு முகாம்கள் நடைபெற இருக்கிறது.

இந்நிலையில் இந்த பணிகளை தொடங்கும் விதமாக வருகிற 29ஆம் தேதி முதல் மகளிர் உரிமைத்தொகைக்கான விண்ணப்பத்தை வழங்க அரசு முடிவு செய்துள்ளதாக தற்போது ஒரு தகவல் வெளிவந்துள்ளது. அதற்கான முழு ஏற்பாடுகள் தற்போது நடைபெற்று வருகின்றன. மேலும் இந்த வாய்ப்பை பயன்படுத்தி விடுபட்ட பெண்களும் மகளிர் உரிமை தொகை பெற  விண்ணப்பித்துக் கொள்ளலாம்.