
பாங்காக்கில் கடந்த 2021 ஆம் ஆண்டு சர்வதேச அழகுப் போட்டி நடைபெற்றது. இதில் வியட்நாமை சேர்ந்த நுயென் துக் கலந்து கொண்டு வெற்றி பெற்றார். இதையடுத்து பல முன்னணி நிறுவனங்கள் அவரை விளம்பர தூதராக நியமித்தது. இந்நிலையில் வியட்நாமில் உள்ள பிரபல நிறுவனத்தின் ஊட்டச்சத்து மருந்தை அவர் விளம்பரப்படுத்தினார். இது உண்மை என்று நம்பி ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் அந்த மருந்துகளை வாங்கி பயன்படுத்தியுள்ளனர்.
அந்த மருந்தில் 200 மி.கி நார்ச்சத்து இருப்பதாக கூறப்பட்டது. ஆனால் ஆய்வகம் நடத்திய சோதனையில் வெறும் 16 மி.கி நார்ச்சத்து மட்டுமே இருப்பது உறுதி செய்யப்பட்டது. இது பொதுமக்கள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து அந்த மருந்துகளை விற்பனை செய்ய அங்கு தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது அந்த விளம்பரத்தில் நடித்ததற்காக அழகி நுயென் உட்பட 3 பேரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.