உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள மகாராஜ்கஞ்ச் மாவட்டத்தில் ஹார்டி டோலி கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் உள்ள ஒரு வீட்டில் உரிமையாளர் கழிப்பறையை சுத்தம் செய்வதற்காக சென்றார். அப்போது தொட்டியிலிருந்து விசித்திரமான சத்தங்கள் வந்ததால் உடனடியாக தொட்டியின் உள்ளே பார்த்தார்.

அங்கு பல கருப்பு நிற பாம்புகள் ஒன்றுக்கு மேல் ஒன்று சுருண்டு கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் உடனே வெளியே ஓடி வந்து அக்கம் பக்கத்தினரிடம் கூறினார். இந்த தகவல் உடனடியாக வனத்துறை அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறை அதிகாரிகள் பாம்புகளை பாதுகாப்பாக பிடித்து காட்டிற்குள் விடும் பணியை மேற்கொண்டனர்.

இதைத்தொடர்ந்து நேபாள எல்லையில் உள்ள அந்த கிராமப் பகுதி அடர்ந்த காடுகளால் சூழப்பட்டிருப்பதால் மழை மற்றும் குளிர் காரணமாக பாம்புகள் கழிப்பறை தொட்டியை தேடி வந்திருக்கலாம் என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், சமூக வலைதளங்களில் மிகவும் வேகமாக வைரலாகி வருகிறது