
தமிழக வெற்றி கழகம் என்ற அரசியல் கட்சியினை நடிகர் விஜய் தொடங்கிய நிலையில் அடுத்து வரும் 2026 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் போட்டியிடுகிறார். கூட்டணிக்கு வரும் கட்சிகளுக்கு ஆட்சி அதிகாரத்தில் பங்கு உண்டு என்று அறிவித்துள்ள நிலையில் திமுகவை அவர் எதிர்ப்பதால் பாஜகவுடன் கூட்டணி வைக்க வேண்டும் என்று கூறி வருகிறார்கள்.
சமீபத்தில் பாஜகவுடன் தமிழக வெற்றி கழகம் கூட்டணி அமைக்காது என நிர்மல் குமார் கூறிய நிலையில் தமிழிசை சௌந்தர்ராஜன் கட்சியின் தலைவர் விஜய் என்பதால் அவர்தான் இந்த அறிவிப்பை வெளியிட வேண்டும்.
அப்போதுதான் ஏற்றுக் கொள்வோம் என்றார். இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த தமிழக வெற்றிக்கழகத்தின் தேர்தல் பிரச்சார பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா அரசியல் எதிரியான திமுக மற்றும் கொள்கை எதிரியான பாஜக ஆகிய கட்சிகளுடன் ஒருபோதும் தமிழக வெற்றி கழகம் கூட்டணி அமைக்காது என திட்டவட்டமாக கூறினார். அதன் பிறகு தற்போது அதிமுக பாஜகவுடன் இருக்கிறது. அதிமுக எதிர்க்கட்சி. அவர்கள் ஆட்சியில் இல்லாத போது நாங்கள் ஏன் அவர்களை எதிர்க்க வேண்டும்.
பலமுறை தேர்தல்களில் தோல்வியடைந்த அதிமுகவுடன் தமிழக வெற்றிக்கழகம் கூட்டணி அமைக்காது என்றும் கூறினார். மேலும் தமிழக வெற்றிக்கழகம் அதிமுக, பாஜக மற்றும் திமுக ஆகிய கட்சிகளுடன் கூட்டணி அமைக்காது என தற்போது ஆதவ் அர்ஜுனா திட்டவட்டமாக தெரிவித்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.