
திருவள்ளூர் மாவட்டம் அம்பத்தூர் டீச்சர்ஸ் காலனியில் உத்தரபிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்த ஹரிஷ் என்பவர் வசித்து வருகிறார். இவரது மனைவி ரஜியா. இந்த நிலையில் ஹரிஷ் தனது மனைவியின் நடத்தை மீது சந்தேகப்பட்டதால் கணவன் மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.
கடந்த 2022-ஆம் ஆண்டு ஹரிஷ் தனது மனைவி ரஜியாவை கை மற்றும் கட்டையால் கொடூரமாக அடித்து கொலை செய்துள்ளார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் ஹரிஷை கைது செய்தனர். இந்த வழக்கு திருவள்ளூர் மாவட்டம் மகிளா நீதிமன்றத்தில் நடந்தது. வழக்கு விசாரணை முடிந்த நிலையில் நீதிபதி ஹரிஷுக்கு ஆயுள் தண்டனையும், 5 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவு பிறப்பித்தார்.