
நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் அமைந்துள்ள காமராஜ் நகர் பகுதியில் அருணாச்சலம் என்பவர் வசித்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் தனது இருசக்கர வாகனத்தை வீட்டின் முன்பு நிறுத்தியிருந்தார். திடீரென அந்த இருசக்கர வாகனம் காணாமல் போனதால் அதிர்ச்சி அடைந்த அவர் பாளையங்கோட்டை காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
அந்த புகாரின் படி வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் இருசக்கர வாகனத்தை தேடி வந்த நிலையில் அதனை திருடியது ஜெயக்குமார் (22), முகமது சபீர்(31) என்பது தெரியவந்தது. உடனடியாக அவர்கள் இருவரையும் கைது செய்த காவல்துறையினர் இரு சக்கர வாகனத்தை மீட்டு உரிமையாளரிடம் ஒப்படைத்தனர். மேலும் அவர்கள் இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.