
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள வண்ணாங்குளம் கிராமத்தில் எவ்வித அரசு மற்றும் தனியார் பேருந்து போக்குவரத்து வசதியும் இதுவரை இருந்தது இல்லை.
தங்கள் ஊருக்கு பேருந்து வேண்டி முதுகுளத்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், வனத்துறை மற்றும் கதர் வாரியத் துறை அமைச்சருமான ராஜகண்ணப்பனிடம், ஊரின் வழியாக கமுதி சென்று வர பேருந்து ஏற்பாடு வசதி செய்து தருமாறு கோரிக்கை வைத்தனர்.
அதன்படி இன்று அந்த ஊருக்கு அரசுப் பேருந்து சேவை தொடங்கப்பட்டது. பேருந்து வரும்போது விசிலடித்து, கைத்தட்டி, குலவை போட்டு மக்கள் வரவேற்றனர்.
தங்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றிய அமைச்சர் ராஜ கண்ணப்பனுக்கு நன்றியை தெரிவித்துக் கொண்டனர்.