
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் செல்வநாயகபுரம் நிலக்கோட்டையில் உள்ள திருமண மண்டபத்தில் அமமுகவின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. மேற்கு மாவட்ட செயலாளரும், முதுகுளத்தூர் முன்னாள் எம்எல்ஏவுமான முருகன் தலைமையில் இந்த கூட்டம் நடைபெற்றது. மதுரை புறநகர் மாவட்ட செயலாளர், தகவல் தொழில்நுட்ப மகளிர் பிரிவு செயலாளர், மருத்துவமனை செயலாளர், ஜெயலலிதா பேரவை துணைத் தலைவர் போன்ற பலர் கலந்து கொண்டனர். சிறப்பு அழைப்பாளராக கட்சியின் பொதுச் செயலாளர் டி டி வி தினகரன் கலந்து கொண்டார்.
அப்போது அவர் கூறியதாவது, வருகிற 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் திமுகவை வீழ்த்த வேண்டும் என்று நினைக்கும் கட்சிகள் எங்கள் கூட்டணியில் இணையும் என்று நம்புகிறேன். இதற்கும் எங்கள் கூட்டணி கட்சியினருடனான சண்டைக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. கட்சியின் முக்கிய நிர்வாகிகள் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்க வேண்டும். கூட்டணி பலப்பட வேண்டும் என்று நினைப்பவன் தான் நான். முக்கிய நிர்வாகிகளுக்கு வாய்ப்பை பெற்று தர வேண்டியது கட்சி தலைமையின் பொறுப்பாகும். திமுக என்ற தீய சக்தி வீழ்த்தப்பட வேண்டும். அதற்காக அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்துள்ளோம் எங்கள் கூட்டணி மேலும் வலுபெறும் என்று அவர் கூறினார்.