
கோவையில் உள்ள கொடிசியா மைதானத்தில் நேற்று நாம் தமிழர் கட்சியின் சார்பில் தமிழின எழுச்சி பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்ட நிலையில் அவர் அங்கிருந்தவர்களிடம் பேசினார். அவர் பேசியதாவது, கடந்த 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் நாம் 1.1% வாக்குகளை பெற்ற நிலையில் தொடர்ந்து படிப்படியாக வளர்ந்து கடந்த 2024 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் 36 லட்சம் வாக்குகளை பெற்றுள்ளோம். வருகிற 2026 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்து தான் போட்டியிடும். எந்த கட்சியுடனும் கூட்டணி கிடையாது. நான் கூட்டணி அமைக்காததால் எங்கள் கட்சியின் தொண்டர்கள் சோர்வடைய மாட்டார்கள்.
இந்தியாவில் ஒரு இடைத்தேர்தலில் கூட புறக்கணிக்காமல் போட்டியிட்ட ஒரே ஒரு கட்சி நாம் தமிழர் கட்சி மட்டும் தான். தோல்வி என்பது தோல்வி கிடையாது அது ஒரு பயிற்சி. எந்த கட்சியுடனும் சேராமல் தனித்து நின்றே மாநில கட்சி அந்தஸ்தை பெற்றுள்ளோம். அடுத்து வரும் தேர்தலுக்கு நாம் தமிழர் கட்சிக்கு விவசாயி சின்னம் கிடைத்துள்ளது. அடுத்து வரும் தேர்தலில் 117 இடங்கள் பெண்களுக்கும் 117 இடங்கள் ஆண்களுக்கும் ஒதுக்கப்படும். இதில் இளைஞர்களுக்கு மற்றும் 134 சீட் கொடுக்கப்படும் என்றார். மேலும் இலங்கை இனப்படுகொலை தொடர்பாக வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்றும் கூறினார்.