
ராணிப்பேட்டை மாவட்டத்தில் திரௌபதி அம்மன் கோவில் திருவிழா நடைபெற்றது. அந்த திருவிழாவில் சாமி ஊர்வலத்தின் போது நடந்த சம்பவம் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது . அதாவது ஊர்வலத்தின் போது ஒவ்வொருவரும் தங்கள் வீட்டு வாசலில் அலங்கரிக்கப்பட்ட சாமி சப்பரம் நின்றவுடன் அர்ச்சனை செய்வார்கள்.
ஆனால் ஒரு வாலிபரின் வீட்டிற்கு முன்பு அர்ச்சனை செய்ய நிறுத்தாததாக கூறப்படுகிறது. இதனால் அந்த வாலிபர் ஏர்கன்னை காண்பித்து மிரட்டல் விடுத்துள்ளார். மேலும் வானத்தை நோக்கி சுட்டார். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் வாலிபரை கைது செய்து விசாரணை நடத்தினர். அப்போது அந்த ஏர்கன்னை ஆன்லைனில் வாங்கியதாக வாலிபர் கூறினார். அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.