சென்னை பாடியில் இருசக்கர வாகனத்தில் கணவன் சரவணன், மனைவி பிரியா மற்றும் ஒரு வயது குழந்தை ஆகிய 3 பேரும் சாலையில் சென்றுள்ளனர். அப்போது வேகமாக வந்த கனரக  லாரி மோதியதில் இருசக்கர வாகனத்தில் இருந்தவர்கள் சரிந்து கீழே விழுந்தனர். இதில் கணவன் கண்முன்னே தலை நசுங்கி மனைவி பிரியா பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் இரு சக்கர வாகனத்தில் இருந்து விழுந்த அவர்களது ஒரு வயது குழந்தை மற்றும் சரவணன் ஆகிய இருவரும் படுகாயம் அடைந்தனர்.

இந்நிலையில் அங்கிருந்தவர்கள் அவர்களை மீட்டு மருத்துவமனை அழைத்துச் சென்றனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை வழங்கப்பட்டது. இருப்பினும் ஒரு வயது குழந்தை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள கணவர் சரவணனுக்கு தீவிர சிகிச்சை வழங்கப்பட்ட வருகிறது. இந்த விபத்திற்கு பின் அந்த வழியாக சென்ற கனரக வாகனங்களை நிறுத்தி அப்பகுதி மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் விசாரணை நடத்தி லாரி ஓட்டுநரை கைது செய்துள்ளனர்.