உத்தரபிரதேச மாநிலம் கௌசாம்பி மாவட்டத்தில் வியாழக்கிழமை இரவு ஒரு அதிர்ச்சி சம்பவம் நடந்தது. குஜராத்தைச் சேர்ந்த சீரக வியாபாரி பவேஷ் பாய், வாரணாசியிலிருந்து டெல்லிக்கு பேருந்தில் பயணம் செய்து கொண்டிருந்தார்.

அந்த பேருந்து கோக்ராஜ் கோட்வாலி பகுதியில் உள்ள ஜெய்ஸ்வால் தாபா அருகே சிற்றுண்டிக்காக நின்றது. பயணிகள் அனைவரும் கீழே இறங்கி சாப்பிட்டுக்கொண்டிருந்த நேரத்தில், மர்ம நபர் ஒருவர் பேருந்துக்குள் நுழைந்து பவேஷ் பாயின் பணம் நிரம்பிய 2 பைகளையும் தூக்கிச் சென்றார்.

சம்பவத்தை கண்ட  பவேஷ் பாய், கத்தி அந்த நபரைத் துரத்தினார். இந்த துரத்தலின் போது, குற்றவாளியின் கையில் இருந்த பைகளில் ஒன்று கிழிந்து கீழே விழுந்தது. அதில் இருந்த ரூ.500 நோட்டு கட்டுகள் சாலையில் சிதறிக் கிடந்தன. இந்த காட்சியை பார்த்த பயணிகளும் வழிப்போக்கர்களும் அந்த பணத்தை எடுக்க  ஓடி வந்தனர்.

சாலையில் கண்ட அந்த காட்சி  பணம் எடுக்கும் போட்டி போல் இருந்தது . அந்த இடத்திற்கு வந்த போலீசார் தடியடி நடத்திய பிறகே நிலைமை சற்று அமைதியானது.

“>

 

போலீசார் பவேஷ் பாயிடம் விசாரணை நடத்தினர். அவரது கூறியதாவது, அந்த 2 பைகளிலும் கோடிக்கணக்கான ரூபாய் இருந்ததாக கூறப்படுகிறது. அவற்றில் ஒன்று மட்டுமே மீட்கப்பட்டுள்ளது. மற்றொன்று கொள்ளையடிக்கப்பட்ட தாக கூறினார்.

இந்த சம்பவத்தில் ஈடுபட்ட நபர்கள் பேருந்தில் ஏற்கனவே பயணம் செய்து கொண்டிருந்திருக்கலாம் என்றும், அவர்கள் திட்டமிட்டபடி செயல்பட்டிருக்க வாய்ப்புள்ளது என்றும் போலீசார் தெரிவித்தனர்.

அதிகாரி ஒருவர்  கூறுகையில், “வியாபாரியின் பை எடுத்துக் கொண்ட குற்றவாளி, படிக்கட்டில் மோதியபோது ஒரு பை கிழிந்து பணம் சாலையில் சிதறியது. அதை சில பயணிகள் திரும்பக் கொண்டு வந்து கொடுத்துள்ளனர். தற்போது ஒரு பையை மட்டும் குற்றவாளிகள் கொண்டு தப்பியுள்ளனர். அவர்களை அடையாளம் காணும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்” என தெரிவித்தார். சம்பவம் தொடர்பாக விரிவான விசாரணை நடைபெற்று வருகிறது.