சென்னை உயர் நீதிமன்றத்தில் கை கால் எலும்பு முறிவுகளுக்கு சிகிச்சை வழங்க வேண்டும் என ஜாகிர் உசேன் தந்தை வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில் ஜெயிலில் உள்ள கழிவறைகளில் எப்படி குற்றவாளிகளுக்கு மட்டும் கை கால் வழுக்கி விழுந்து மாவு கட்டு போடப்படுகிறது என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

அதன்பிறகு கழிவறைகளை பயன்படுத்தும் காவல் ஆய்வாளர்களுக்கு மட்டும் ஏன் எதுவும் ஆகவில்லை எனவும் நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. காவல் நிலைய கழிவறைகள் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு மட்டும் வழுக்கி விழும் வகையில் உள்ளதா என கேள்வி எழுப்பிய சென்னை உயர்நீதிமன்றம் இனி இதுபோன்று நடந்தால் காவலர்கள் பணியை இழக்க நேரிடும் என கடுமையான எச்சரிக்கை விடுத்தனர்.

மேலும் சமீப காலமாக குற்ற செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு கை கால்களில் மாவு கட்டுகள் போடப்படும் நிலையில் அவர்கள் வழுக்கி விழுந்து விட்டதாக போலீஸ்காரர்கள் கூறும் நிலையில் தற்போது உயர் நீதிமன்றம் எச்சரித்துள்ளது. குறிப்பிடத்தக்கதாகும்.