ஹரித்வார் மாவட்டத்தின் BHEL பகுதியில், சில இளைஞர்கள் ஓடும் காரிலிருந்து ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்து, நடனமாடும் வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலானது. இந்த வீடியோவில், இளைஞர்கள் போக்குவரத்து விதிகளை முழுமையாக மீறுவதும்,  உயிருக்கு ஆபத்து ஏற்படும் வகையில் செயல்படுவதும் தெளிவாகப் பதிவாகியுள்ளது. சம்பவம் தொடர்பாக போலீசார் உடனடியாக நடவடிக்கை எடுத்து, வீடியோவில் காணப்பட்ட காரை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும், சம்பந்தப்பட்ட இளைஞர்களுக்கு எதிராக குடிபோதையில் வாகனம் ஓட்டியதற்கும், சாலை பாதுகாப்பை மீறியதற்கும் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

 

இந்த சம்பவம் குறித்து ஹரித்வார் எஸ்பி பங்கஜ் கரோலா கூறும்போது, “ஸ்டண்ட் செய்பவர்கள் எதிர்காலத்தில் இதுபோன்ற செயல்களில் ஈடுபட முடியாத வகையில் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்,” என எச்சரித்தார். தற்போது பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் போக்குவரத்து விதிகளைப் பற்றி விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்படும் என்றும், ஹரித்வார் காவல்துறை சாலைகளில் நடக்கும் எந்தவொரு ஸ்டண்ட் செயலும் இனிமேல் பொறுக்கபடாது என்றும் கூறியுள்ளார். இதுவரை பல வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என்றும் தெரிவித்துள்ளார்.