மத்திய பணியாளர் தேர்வாணையத்தில் யுபிஎஸ்இ தலைவராக பிரீத்தி சூடான் இருந்த நிலையில் கடந்த ஏப்ரல் 29ஆம் தேதி அவருடைய பதவிக்காலம் முடிந்தது. இந்நிலையில் மத்திய பணியாளர் அமைச்சகம் முன்னாள் பாதுகாப்பு செயலாளரான அஜய் குமாரை புதிய யுபிஎஸ்இ தலைவராக நியமனம் செய்துள்ளது.

இவர் 1985 ஆம் ஆண்டு இந்திய நிர்வாக சேவை கேரளா கேடர் அதிகாரியாக இருந்து ஓய்வு பெற்றவர். அதன் பின் கடந்த 2019 ஆகஸ்ட் முதல் 2022 அக்டோபர் வரை பாதுகாப்பு செயலாளராக பணியாற்றி வந்தார். இவரை புதிய யுபிஎஸ்இ தலைவராக நியமனம் செய்வதற்கு ஜனாதிபதி திரௌபதி முர்மு அனுமதி கொடுத்துள்ளார். மேலும் இவர் யுபிஎஸ்-யின் புதிய தலைவராக பதவியேற்றுள்ளார்.