
சென்னை மாவட்டம் தியாகராய நகர் பகுதியில் ரங்கநாதன் தெருவில் 2 மாடி கொண்ட பிரபல துணிக்கடை ஒன்று அமைந்துள்ளது. அங்கு திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கும், போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர்.
அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் பல மணி நேர போராட்டத்திற்கு பின்பு தீயை அணைத்தனர். அதற்குள் துணிக்கடை முற்றிலும் எரிந்தது. அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எந்த ஒரு பாதிப்பும் ஏற்படவில்லை.
இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது மின் கசிவின் காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என தெரியவந்தது. இந்த சம்பவம் அப்பகுதி முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.