
பொள்ளாச்சியில் கடந்த 2019 ஆம் ஆண்டு இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு வீடியோ எடுத்து மிரட்டி மீண்டும் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த பாலியல் வன்கொடுமை வழக்கின் விசாரணை கடந்த 6 ஆண்டுகளாக நடைபெற்று வந்த நிலையில், தற்போது இதன் விசாரணை முடிந்து கோவை மகளிர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அதன்படி பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளிகள் 9 பேருக்கும் சாகும்வரை ஆயுள் தண்டனை என தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதற்கு தமிழ்நாட்டில் பல்வேறு தரப்பினரும் வரவேற்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் பொள்ளாச்சி வழக்கில் வாதாடிய சிபிஐ வழக்கறிஞர் சுரேந்திர மோகனுக்கு கோவை மகளிர் நீதிமன்ற நீதிபதி நந்தினி தேவி பாராட்டு தெரிவித்துள்ளார். ஆணாக இருந்தாலும், பாலியல் வழக்கில் சிறப்பாக செயலாற்றி இருக்கின்றார் என்றும் தெரிவித்துள்ளார்.