
ஜம்மு காஷ்மீரில் அமைந்துள்ள பஹல்காம் சுற்றுலா தளத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் பயங்கரவாதிகளுக்கு பதிலடி கொடுத்துள்ளது. இதைத் தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையே பதட்டமான சூழ்நிலை அதிகரித்து வந்த நிலையில் தற்போது இயல்பு நிலைக்கு திரும்பி உள்ளது.
இந்நிலையில் இந்தியா, பயங்கரவாதிகள் மீது நடத்திய ஆப்ரேஷன் சிந்தூர் தாக்குதல் குறித்து கேரளாவை சேர்ந்த ரஜாஸ் ஷபா சைதீப் என்ற நபர் விமர்சனம் செய்துள்ளார். இவர் மராட்டிய மாநிலம் லடக்கஞ்ச் பகுதியில் வசித்து வந்த நிலையில் ஆபரேஷன் சிந்தூர் பற்றி விமர்சனம் செய்த காரணத்தினால், காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
இதைத்தொடர்ந்து ரஜாஸ் சபா கேரளாவை சேர்ந்தவர் என்பதும், அவருடைய வீடு கொச்சியில் இருக்கிறது என்பதும் விசாரணையில் தெரியவந்ததால் காவல்துறையினர் அவருடைய வீட்டிற்கு சென்று சோதனை நடத்தினர். அப்போது பல மின்கருவிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் இது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.