
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் பகுதியில் தினேஷ்நாத் என்பவர் தனது மனைவியுடன் வசித்து வருகிறார். இவர் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர். இவருக்கு வேடசந்தூர் வடமதுரை சாலையில் பிளைவுட் மற்றும் கண்ணாடி கடை அமைந்துள்ளது. இந்நிலையில் நேற்று சிறு வேலை காரணமாக தன் மனைவியுடன் கடைக்கு சென்றிருந்தார்.
அவர்கள் வேலை முடிந்து வீட்டிற்கு திரும்பிய நிலையில் வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருந்தது. அதைப் பார்த்து அவர்கள் அதிர்ச்சடைந்த நிலையில் உள்ளே சென்று பார்த்த போது ரூ.90 ஆயிரம் ரொக்க பணம் மற்றும் 6 1/2 பவுன் நகைகளை கொள்ளையர்கள் திருடி சென்றது தெரிய வந்தது.
உடனடியாக தினேஷ்நாத் காவல் நிலையத்தில் இது குறித்து புகார் கொடுத்தார். அந்த புகாரின்படி வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.