
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பகுதியில் பிரகாஷ் என்ற 19 வயது வாலிபர் வசித்து வந்துள்ளார். இவர் திருப்பூரில் உள்ள கோல்டன் நகர் பகுதியில் ஆட்டோ ஓட்டுநராக பணியாற்றி வந்தார். இவருக்கும் அந்த பகுதியை சேர்ந்த சிலருக்கும் இடையே மது போதையில் தகராறு ஏற்பட்டு அது முன் விரோதமாக மாறி உள்ளது.
இந்நிலையில் நேற்று இரவு அதே பகுதியில் தலை நசுக்கப்பட்ட நிலையில் பிரகாஷ் சடலமாக கிடந்தார். இது தொடர்பாக காவல் துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில் அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். இந்நிலையில் பிரகாஷின் தலை உடைக்கப்பட்டு கிடந்ததோடு அவரின் அருகே ஒரு பெரிய கல்லும் கிடந்தது.
இதனால் அவர் தலையில் கல்லை போட்டு கொலை செய்யப்பட்டார் என்பது தெரிய வந்த நிலையில் அவரது சடலம் பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்பட்டது. பின்னர் திருப்பூர் காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டதில் 5 சிறுவர்கள் உட்பட ஆறு பேர் சேர்ந்து அவரை கொலை செய்தது தெரியவந்த நிலையில் அவர்கள் அனைவரையும் போலீசார் கைது செய்தனர்.
இந்த கொலை ஏரியா பிரச்சனை தொடர்பாக நடந்ததாக கூறப்படுகிறது. மேலும் இது குறித்து போலீசார் விரிவான விசாரணை நடத்திவரும் நிலையில் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.