தமிழக முதல்வர் ஸ்டாலின் கவிஞர் வைரமுத்துவின் தாயார் அங்கம்மாள் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். தமிழ் சினிமாவில் பிரபல பாடலாசிரியராக இருக்கும் வைரமுத்துவின் தாயார் அங்கம்மாள் நேற்று மாலை காலமானார். அவருடைய இறுதி சடங்கு இன்று தேனி மாவட்டம் வடுகம்பட்டியில் நடைபெறுகிறது.

இவருடைய தாயார் மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வரும் நிலையில் முதல்வர் ஸ்டாலினும் இரங்கல் தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் வெளியிட்டுள்ள இரங்கல் குறிப்பில், தமிழையும் அன்பையும் ஊட்டி வளர்த்த அன்னையை இழந்து தவிக்கும் கவிப்பேரரசு வைரமுத்து அவர்களுக்கும் அவருடைய குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக் கொள்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.