ஜம்மு- காஷ்மீரில் உள்ள அனந்தராக் மாவட்டத்தில் பகல்ஹமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்தியா ஆபரேஷன் சிந்தூர் மூலம் பதிலடி தாக்குதலை நடத்தியது.

அந்தத் தாக்குதலில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது  தாக்குதல் நடத்தப்பட்டது. அந்தத் துல்லிய தாக்குதலில் 9 பயங்கரவாத உட்காட்டு அமைப்புகள் அழிக்கப்பட்டன.

அதில் 100க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் அழிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து இந்தியா பாகிஸ்தான் மீதும், பாகிஸ்தான் இந்தியா மீதும் தொடர் தாக்குதல்கள் நடத்தி வருகிறது. அந்தத் தாக்குதலில் இந்தியாவின் முக்கிய நகரங்கள், வழிபாட்டு அமைப்புகள், ராணுவ அமைப்புகளை பாகிஸ்தான் கடந்த மே 8ஆம் தேதி ட்ரோன்கள் மூலம் தாக்க முயற்சித்தது.

அதனை இந்திய ராணுவத்தினர் S400 சுதர்சன் சக்ரா என்ற ஏவுகணை மூலம் தடுத்து நிறுத்தினர். இந்த S400 கவச அமைப்பு பாகிஸ்தானின் ராணுவ தளவாடங்களை சேதப்படுத்தியதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.

இந்நிலையில் இந்தியாவின் மிக முக்கிய பாதுகாப்பு கவசமாக கருதப்படும் S400 கவச அமைப்பு பாகிஸ்தான் தாக்குதலில் சேதமடைந்ததாக பாகிஸ்தான் வெளியிட்ட செய்தி குறித்து இந்திய பாதுகாப்புத்துறை விளக்கம் அளித்துள்ளது.

அதில் S400 சுதர்சன சக்ரா கவச அமைப்பை பாகிஸ்தான் சேதப்படுத்தியதாக வெளியான தகவல் ஆதாரம் அற்றது. மேலும் பாகிஸ்தானின் சியால்கோர்ட் மாவட்டத்தில் பயங்கரவாதிகளின் ஏவுதளம் முழுமையாக அழிக்கப்பட்டு விட்டதாகவும் தெரிவித்துள்ளது

அந்த தாக்குதலில் பயன்படுத்தப்பட்ட முக்கிய ஆயுதமான S400 சுதர்சன சக்கரா என்று அழைக்கப்படும் ஏவுகணை பாதுகாப்பு அமைப்பு ஆசியா கண்டத்திலேயே இந்தியாவிடம் மட்டும் தான் உள்ளது.

அதனை இந்தியா ரஷ்யாவிடம் இருந்து பெற்றது. அந்த S400 கவச அமைப்பு 600 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும் நமது எல்லையை நோக்கி வரும் எந்த ஒரு ஏவுகணைகள், ட்ரான்களையும் துல்லியமாக அடையாளம் காட்டும் திறன் கொண்டது.

இந்த S400 அமைப்பின் 5 படைப்பிரிவுகளை வாங்குவதற்காக இந்தியா கடந்த 2018 ஆம் ஆண்டில் ரஷ்யாவுடன் ரூபாய் 35000 கோடி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.

தற்போது 3 படைப்பிரிவுகள் செயல்பாட்டில் உள்ளது. மீதமுள்ள இரண்டும் வரும் 2026 ஆம் ஆண்டுக்குள் தரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒவ்வொரு S400 படைப்பிரிவும் 2 பேட்டரிகளைக் கொண்டது. ஒவ்வொன்றும் 6 லாஞ்சர்கள், 1 கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு அமைப்பு, கண்காணிப்பு ரேடார் ஆகியவற்றைக் கொண்டது.

இதன் ஒவ்வொரு பேட்டரியும் 128 ஏவுகணங்களை தாங்கும் திறன் கொண்டவை என கூறப்படுகிறது. சமீப ஆண்டுகளாக இந்தியா தனது வான்வழி தாக்குதலை பன்மடங்கு அதிகரித்துள்ளது. அதில் மிகவும் முக்கியமான ஒன்று S400 சுதர்சன் சக்ரா வான் பாதுகாப்பு அமைப்பாகும்.